உதவி

உங்கள் Prime Video விளம்பரமில்லாச் சந்தாவை ரத்துசெய்தல்

இணையதளம் வழியாகவோ Prime Video செயலி மூலமாகவோ Prime Video விளம்பரமில்லாச் சந்தாவை ரத்துசெய்யலாம்.

Prime Video இணையதளம் வழியாக விளம்பரமில்லாச் சந்தாவை ரத்துசெய்யலாம்.

  • இங்கே செல்லவும்: உங்கள் கணக்கு.
  • விளம்பரமில்லாச் சேவையை ரத்துசெய் என்பதைத் தேர்ந்தெடுத்து உறுதிசெய்யவும்.

Fire TV, Smart TVகள், கேம் கன்சோல்கள் மற்றும் செட் டாப் பாக்ஸ்களுக்கான Prime Video செயலியில் உங்கள் விளம்பரமில்லாச் சந்தாவை ரத்துசெய்யவும்.

  • அமைப்புகள் என்பதற்குச் சென்று Prime என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • விளம்பரமில்லாச் சேவையை ரத்துசெய் என்பதைத் தேர்ந்தெடுத்து உறுதிசெய்யவும்.

Android, iOS மற்றும் Fire டேப்லெட்டிற்கான Prime Video செயலியில் உங்கள் விளம்பரமில்லாச் சந்தாவை ரத்து செய்யவும்.

  • அமைப்புகள் என்பதற்குச் சென்று Prime & சந்தாக்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • விளம்பரமில்லாச் சேவையை ரத்துசெய் என்பதைத் தேர்ந்தெடுத்து உறுதிசெய்யவும்.

உங்கள் பில்லிங் சுழற்சி முடிந்ததும், Prime திரைப்படங்கள் & டிவி ஷோக்களைப் பார்க்கும்போது குறைவான விளம்பரங்கள் காட்டப்படும். நீங்கள் Apple மூலம் உங்கள் விளம்பரமில்லாச் சந்தாவுக்குப் பணம் செலுத்தினால், உங்கள் சந்தா புதுப்பிக்கப்படுவதற்குக் குறைந்தது 24 மணிநேரங்களுக்கு முன்னர் எந்தவொரு சந்தாவும் ரத்துசெய்யப்பட வேண்டும், இல்லையெனில் உங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படலாம்.

உங்களுக்குக் கூடுதல் உதவி தேவைப்பட்டால், எங்கள் வாடிக்கையாளர் உதவி முகவர்களில் ஒருவருடன் இணைக்க, எங்களைத் தொடர்பு கொள்ளவும்.